
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
1-பாலகுமாரன் = நண்பர்
2-நண்பர் = பாலகுமாரன்
இரண்டாவதையே முதலாவதாய் மதிக்கிறேன் நான்! அந்தத் தோழமையை அவரின் அருகாமையில் மட்டுமல்ல, வெறும் நினைவலையில் கூட உணர்கிறேன்.
உள்ளதை எழுதுபவர்களில்
உள்ளத்தை எழுதும் Powerfulபுத்தியும் அதன் தன் மை’யை சுவாரஸ்யப்படுத்தி பலரையும் வசியப்படுத்தும் யுக்தியும் படைத்தவர்.
போகிற walk-கில் என் அப்பாவை பற்றி நான் பேசியவற்றை தன் அழகிய நடையில் அவர் புத்தகமாய் பதிந்ததை பத்திரமாய் பாதுகாப்பேன் காலத்திற்கும்!
70-வதில் எழுவதே. நிற்பதே, நடப்பதே ஊன்றுகோல் துணையுடனே பலருக்கு பாலருக்கும் குமரன்களுக்கும் உள்ள உள்ளத்தெம்போடு இந்த 70-பதிலும் திரு பாலகுமாரனின் எழுதுகோல் நின்று விளையாடி நம் கவனத்தை வென்று விடுகிறது. எழுத்தின் உசத்தியான நிலையிலிருந்து என்றும் விழா சிந்தனாவாதியைப் பற்றி இவ்விழா மலரில் எழுதும் ஆனந்தத்திற்கு பேரே பேரானந்தம்!
வாழ்த்துக்கள் சூப்பா பாலகுமாரனுக்கும். அவர் தன் நண் படைக்கும்.
–
வெறும் வாழ்த்தெதற்கு?
பெருமை’ வாய்ந்த எழுத்துச்சித்தருக்கு!
அவர் எழுத்தால் மனநல லயம் அடைந்தவர்களின் இதயத்துடிப்பே அவரின் நீண்ட ஆரோக்கிய ஆயுளுக்கு சந்தா கட்டும்!