Blog

தாமாஜி – பாலகுமாரன்

யார் நீங்கள் ஏன் வாசலில்  நிற்கிறீர்கள். உள்ளே வாருங்கள். வந்தவரை  தாமாஜி  கை  கூப்பி வரவேற்றர்.

நான் வழிப் போக்கன். கடும் பசி  இங்கு உணவிடுவார்கள் என்று சொன்னார்கள் அதனால் வந்தேன்.

கடவுளே  கடும் பசியா, முதலில்  இந்த பால் குடியுங்கள். பூறியா, சப்பாத்தியா சப்ஜியா சர்க்கரை குழம்பா, வெள்ள அப்பமா கார  அப்பமா கருப்பஞ்சாரா தேன்  கலந்து நீரா  வந்தவர்  பசித்தவர். எல்லாம் எடுத்து கொண்டார். அழுதுகொண்டே உண்டார். தட்டு நிறைய உணவு இருக்கிறதே எதற்கு அழுகை. என் குடும்பம் ஆறுபேர் கொண்டது. அது இந்நேரம் பசியால் வாடிக்கொண்டிருக்கும். அதை நினைக்கும் பொழுது அழுகை வந்தது. அவர்களுக்கும் உணவு அனுப்பினால் போயிற்று.

எப்படி எப்படி.

நூறு கலம் நெல் மூட்டை எற்றி அனுப்புகிறேன். உடன் காவலர்களை அனுப்புகிறேன். கண்ணீரை துடைத்து விட்டு உண்ணுங்கள். தாமாஜி உம்மை வள்ளல் வள்ளல் என்று ஊர் புகழ்கிறது. ஆனால் எனக்கு நீங்கள் வள்ளல் அல்ல. தாமாஜி நீர் கடவுளய்யா. வந்தவர்  உண்ணவும் முடியாமல்  வாழ்த்தவும் முடியாமல்  திண்டாடினார். தாமாஜி  பிரியத்துடன் அணைத்து கொண்டார். 

நெல் வண்டி கிளம்பியது. யார் நெல்லை யாருக்கு அனுப்புவது. அந்த  நெல் தாமஜியின் சொத்தா . அரசாங்க  சொத்துதானே. நாம் அளித்த வரிதானே. இதை  ஒரு வழிப்போக்கருக்கு கொடுத்து விட  தாமாஜிக்கு  அதிகாரம்  யார் கொடுத்தது.

தாமாஜி  கொடுப்பார். நாம் பிடுங்கி கொள்வோம். ஆளுக்கு கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். பத்து பேர் கூடி  நூறு  கலம் கொள்ளை அடித்தால் ஆளுக்கு பத்து கலம். கூட்டம் செயலில் இறங்கியது. வலிப் போக்கர் திகைத்தார். வேதனைப்பட்டார்.

கவலைப்படாதேய்யா. இந்தாரும் காசு. ஊருக்கு போய் குடும்பத்தை கூட்டி வாரும். என் வீட்டில் தங்கும் . நான் உணவிடுகிறேன். அந்த  பஞ்ச பரதேசிகள்  வந்து  சேர்ந்தர்கள். ஊர் ஆத்திரமுய்றறது. ஊர் என்பது  கிறுத்தவம் மிக்கது. நல்லதும் செய்யாது  நல்லதை  செய்யவும் விடாது.

அரசங்கத்திற்கு  அதாவது அரசருக்கு பொய்யாகவும் மெய்யாகவும் செய்தி போயிற்று.

எதற்கு  கோவப்படுகிறீர்கள் கொடுப்பதை ஏன் தடுக்கிறீர்கள். எனக்கு இன்னது வேண்டும் என்று  கேளுங்களேன். தாமாஜி  மக்களை கேட்டார். மக்கள் பல் காட்டினார்கள். அவர்களுக்கும் தானியம் வழங்கப்பட்டது. இதுவும் அரசருக்கு செய்தியாக போயிற்று. அடுத்தவரை  போட்டுக் கொடுப்பது என்பது உலகத்தின் பண்டைய  தொழில்களில் ஒன்று.

தாமாஜி  ஒரு அரசாங்க ஊழியர். கிராம அதிகாரி. பத்து கிராமங்களின் வரும்படியை ஒன்றாக்கி கஜானாவிற்கு  அனுப்ப வேண்டியவர் . என்னுடைய சொத்தை பாதுக்காக வேண்டியவன்.அவனே என் சொத்தை  திருடுவதா கழுத்தில் கயிறு  கட்டி தலைநகருக்கு இழுத்து வாருங்கள். மன்னன் சிறிய  படையை அனுப்பினான். படை  வந்தது . கைது  செய்தது . நல்லவர்களின் புகழை  காண  சகிக்காதவர்கள்  அந்த நல்லவருக்கும் இழிவு சேர  குதுகளிப்பார்கள். வாங்கி தின்றவர்களே  வக்காணையாக  நியாயம்  பேசுவார்கள் . ஊர் சந்தோசைப்பட்டது. துக்குத்தது . தலைநகர்   நோக்கி போகும்போது பண்டரிபுரம் தாண்டினார்கள் . கோவிலுக்குள் போய் வருகிறேன் என்று கேட்டபோது  காவலர்கள்  மருதார்கள். தப்பித்து  விட்டிர்கள் என்றால் தலை  போய் விடும். ஐயா  விடமாட்டோம் என்றார்கள். கெஞ்சி கூத்தாடினர்கள் . குடும்பத்தின் மீது சத்தியம் செய்தார். கயிறை  அவிழ்த்து விட்டு பின்னால் வந்தார்கள் . அவர் பாண்டுரங்கனை  கட்டிக் கொண்டு கதரீனர். நான்  செய்தது  தவறுதானா  பசி  நீங்கியதும் , பஞ்சம் போக்கியதும் தவறுதானா  ஊர் மக்களுக்கு வரும்படி  இருந்தால் அவர்களே  வாரி  கொடுத்திருப்பார்கள். அவர்களின் விவசாயம் பொய்த்துப் போனதால்  மழை  இன்றி விளைச்சல் அருகியதால் என்னோடு சண்டையிட்டார்கள். அவர்கள் துக்கம் தீரவும் நான் செயலாற்றினேன். பசி போக்கினேன்  வீட்டிலுள்ளவனை காயபோட்டு வழியில் போகிறவனுக்கு வாரி  கொடுப்பது சரியில்லையே என்று செய்தேன். என்ன பிழை கண்டாய்.ஏது குற்றம் என் மீது. என்னை கைது செய்வதில் உனக்கென்ன உற்சாகம். நீயும் என் கிராமத்து மனிதர்கள் சிலரைப் போல மாறிவிட்டாயா. எத்தனை நல்லது செய்தாலும் அயோக்கியன் என்று அழைப்பதே சிலருக்கு ஆசை. அதில் நீயும் ஒருவனா. கண்ணீர் விட்டுஅழுதார்.காவலர்களும் அழுதார்கள். அவர்களும் மனிதர்கள் தானே.

அங்கே அரசருக்கு ஏதோ உறுத்த தாமாஜி தரவேண்டிய கணக்கு என்னவென்று கேட்டார். எண்பது லட்சம் வராகன் என்று சொல்லப்பட்டது. அவ்வளவு ஏமாற்றி விட்டானா ஆத்திரப்பட்டார்.அன்று மாலை அந்தி சாயும் வேளை தாமாஜியிடமிருந்து ஆள் வந்திருப்பதாக செய்தி வந்தது. ஆறடி உயரமும் அழகான முகமும் கரு நிறமும் கொண்டையும் மயிற்பீலியும் பெரிய கண்களும் மேக நிறத்தில் ஆடையும் இடுப்பில் வேய் குழலுமாய் ஒரு ஆள் வந்து கை கூப்பி வணக்கம் சொன்னான்.

என்ன,

தாமாஜி வரி வசுல் செய்த பணம் அனுப்பியிருக்கிறான். எவ்வளவு. எண்பது லட்சம் வராகன். எங்கே. என் பின்னே உள்ள பெட்டியில். யார் அங்கே திற. பெட்டி திறக்கப்பட்டது.மின்னியது பொன் நாணங்கள். அள்ளி எடுத்து வழிய விட கலகலவென்று சத்தம். அபரிஞ்சி தங்கம்.

எண்ணிப் பார்.

கணக்கு சரியாக இருக்கிறது.

சந்தோஷம். தாமாஜிக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.அந்தப் பக்கம் வரும்போது அவசியம் சந்திக்கிறேன். மன்னன்  குதூகலமானான்.

ஒரு வாரம் கழித்து தாமாஜி கழுத்தில் கயிறோடு சபைக்கு அழைத்து வரப்பட்டான். என்ன ஆயிற்றடா உனக்கு. என்ன செய்கிறீர்கள். கைது செய்யச் சொன்னீர்களே யாரை தாமாஜியை. அவர்தான் வரிப்பணம்தந்து விட்டாரே. என்ன தாமாஜி இதைச் சொல்ல வேண்டாமா.

வரிப்பணமா நானா தரவில்லையே.

போன வாரம் ஆள் அனுப்பினீரே.

நானா. ஆளா. பேர் என்ன.

பாண்டுரங்கன்.

கடவுளே அவர் எப்படி இருந்தார். உயரமாய் கருமையாய் கொண்டையோடு மயிறிபீலி அணிந்த நீல நிற உடை உடுத்தி வேய்ய கொளிசொருகி அழகிய வதனம். கண் கொள்ளா சிரிப்பு. கும்பிடுவதில் கூட கம்பீரம். பேசுவதில் சினேகம். இது தாமாஜியின் ஆளா நாமே வைத்துக் கொள்ளலாமே என்ற நினைப்பே வந்தது. நீ அனுப்ப வில்லையா.

தாமாஜிக்கு புரிந்தது.

பாண்டுரங்கா பிளிறினார். அங்கே அழுது தான் வேண்டியதைச் சொன்னார். அரசன் திகைத்தான். வந்தது பாண்டடுரங்கனா. அத்தனையும் அவன் காசா. எழுந்து நின்று கை குவித்தான்.

தாமாஜி மன்னித்து விடப்பா. நீ கடவுளின் சினேகிதன். நான் வெறும் மன்னன். உனக்காக கடவுளே வரிப்பணம் சுமந்து வந்திருக்கிறான் என்றால் நீ எப்பேர்பட்ட உத்தமன். உன் செயல் அத்தனையும் எவ்வளவு உன்னதம். இல்லையெனில் கடவுள் வந்திருப்பாரா. தாமாஜி என்னை மன்னித்து விடப்பா. இறங்கி வந்து தழுவிக் கொண்டான்.

கவுளின் சினேகிதத்தை யார் புறக்கணிப்பார்.

மன்னரே நீ பெரும் பாக்கியசாலி. இதுவரை நான் கண்ணனை கண்டதில்லை. நீர் பார்த்து விட்டீர். பேசி விட்டீர். நான் பார்க்கவும் இல்லை. நான் பேசவும் இல்லை நீ மன்னன் இல்லை. மகா புண்ணியவான். இல்லையெனில் கடவுள் தரிசனம் உனக்கு கிடைத்திருக்குமா. அவர்கள் தழுவிக் கொண்டார்கள்.

தாமாஜி அந்த கிராமங்களுக்கு குறுநில மன்னன் என்று அறிவிக்கப்பட்டான். எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் மன்னா. தாமாஜி தீர்மானமாக மறுத்தார். இந்த அரசாங்க வேலையிலிருந்து விடுதலை கொடுங்கள். இனி வாழ்வு முழுவதும் கிருஷ்ண ஜபமம்தான். அரசரிடம் விடை பெற்றார். தன் குடும்பத்தை பண்டரிபுரத்திற்கு வரவழைத்தார். மனதிற்குள் இடையறாத கிருஷ்ண தரிசனம் கண்டார்.

நல்லவருக்கு கடவுள் சோதனை தருவான். ஆனால் காப்பாற்றி விடுவான். மிகப் பெரிய கௌரவத்தை தருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *