எழுத்து சித்தர் பாலகுமாரன் என்னும்
ஓர்
அவதாரம் இந்த மண்ணில்
அவதரித்த பொன் நாள்!
உலகமே உச்சி பார்த்து வியக்கும்
பெரிய கோவில் அமைந்துள்ள,
தஞ்சை என்னும் தடாகத்தில் பூத்த
பொற்றாமரை!!
இராஜ ராஜ சோழனின் வாள் வீச்சு
போன்றது,
எழுத்துசித்தரின் எழுத்து வீச்சும்..
அவர்தம் இலக்கிய பேச்சும்!!
கல்லணையை கட்டி தழுவி முத்தமிட்டு
ஓடி வரும் காவிரியின்
அலை நூரை போல இருக்கும்
அவர் எழுத்து உரை!!
வெள்ளி திரையில் இவர் வடித்த
வசனங்கள்,
படிக்காத பாமரர்களுக்கும்
பாட புத்தக வரிகளானது!!
இவரின் உடையார், கங்கை கொண்ட சோழன் நாவலும்
நம்மை அந்த ஆட்சி காலத்தில்
காட்சிப் படுத்தி காட்டும்!
ராஜ ராஜ சோழனை எல்லோர்
நெஞ்சில் நிறுத்திய எழுத்துநில வேந்தன்!!
பிச்சைக்காரன் என்று சொல்லி கொண்ட,
விசிறி மகானின் சித்தாந்த திருவடிகளை பற்றிய
வெண்தாடி வேந்தன்!
அறம் பாடுவதில் அழகு கொஞ்சும்!
வீரம் சொல்லும் களத்தில்
அக்கினி கனல் கக்கும்!
மடை திறந்த அன்பின் வெளி நிலையில்,
நேசப்பூக்களை அகமெங்கும்
மலர்த்தவல்ல,மாமனிதர்!
பெண்களின் வலிகளை…
வாழ்வியலை..
வர்ணங்களை..
இவர் போல எழுது கோல் கொண்டு
எடுத்தாண்டவர் வேறு எவரும் இல்லை!!
ஒரே கால கட்டத்தில்
கல்கி.
குமுதம்
ஆனந்த விகடன்
குங்குமம்,
இதயம் பேசுகிறது,
பாக்கெட் நாவல்
என அத்தனை
பத்திரிகைகளும் இவரை
இராஜவாக்கி பல்லக்கில் ஏற்றி
பவனி வந்தது!!
அடர்ந்த நெற்றியில் விபூதி மணக்க,
அதன் மேல் குங்குமம்
குடியேற,
மென் விரல் கொண்டு அந்த
வெண் தாடியை வருடி விட்டு நீங்கள்
சிரிக்கும் சிரிப்போசை….
அடடா…
அடடா… அது இசை…
மெல்லிசை,
பண்ணிசை!!
உடையார் புகழ் பாடிய
பெருமகனின்,உடை கூட
அவர் உள்ளம் போல,
வெள்ளையும், வெள்ளையும்
தான்!
‘நான் பாலகுமாரன் பேசுகிறேன்’
என்று குரலெடுத்து
பேசுகையில்…
குயில் கூட தோற்க்குமையா…??!!
அன்பும், கருணையும், அருளும், எண்ணத்தில் சொல்லாய் உருவாகி,
உரையாய் உம்மிடம் இருந்து வரும் போது,
உருகும்,
உருக்கும்,
உயிர்ப்பிக்கும்!!!
வாழ்வின் அத்தனை
வலிகளை,
உணர்வுகளை,
புரிதலை,
பெருமதிப்பினை,
பேரன்பினை,இந்த
பிரபஞ்சம் முழுவதும் கொண்டு
சேர்த்து,எழுத்து,பேச்சு, அதையும் தாண்டி தம் வாழ்வின் மூலம் நிகழ்த்தி காட்டி சென்ற
அவருடைய
அதிர்வலைகள்…இதோ கோடிக்கணக்கான இதயங்களில் குருவாய் நிறைந்து,இன்றும்கூட
சித்த புருஷனாய் அருளாட்சி
நடத்துகின்றார்!!
அய்யனே,
தாயுமானவரே!
குருவே!!
கண்மணி தாமரையே! இலக்கிய உலகில்
இரும்புகுதிரை!
நீங்கள் அவதரித்த இந்த நாளில்
உங்கள் பாத மலர்களை..
என் பிஞ்சு விரல் ஒரு சேர
வணங்கி
வழிபடுகிறேன்💐
ஓம் குருவே சரணம்!!!!!
@தோலாம்பாளையம்,பிரகாஷ்
பாலகுமாரன் என்னும்பிதாமகன்

28
Dec